‘STR48’ படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா.? செம்ம மிரட்டலா இருக்கே.! ஒருவேளை அம்பியா இருப்பாரோ..

Simbu STR-48 : நடிகர் சிம்பு அவர்கள் தமிழ் திரையுலகில்  குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமாகி  பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலாக ‘காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் கதாநாயகனாக வலம் வந்தார்.   இதனைத் தொடர்ந்து  கோவில், குத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் ஜோதிகா உடன் சேர்ந்து நடித்த திரைப்படமான மன்மதன் திரைப்படம் இவருக்கு பெரும்  வெற்றியை அள்ளிக் கொடுத்தது.

மேலும் இவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்த படமான வல்லவன்  திரைப்படத்தை இவரே இயக்கி அத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் போன்றவைகளையும் இவரே எழுதியுள்ளார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றது. மேலும் இவர் த்ரிஷாவுடன் இணைந்த நடித்த திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் சிம்பு பத்து தலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்  ‘STR48’  என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு புதிய கெட்டப்பில் தன்னை தயார்படுத்தி வருவதாகவும் இதற்காக இவர் அமெரிக்காவில் பயிற்சி எடுத்ததாக  சமூக வலைதளங்களில்  பலரால் பேசப்பட்டு வருகிறது.

str-48
str-48

இத்திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு  பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் சிம்புவுடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சிம்பு  குடுமி வைத்து தனது கெட்டப்பை மாற்றியிருப்பதை  பார்த்த ரசிகர்கள்  வியப்படைந்துள்ளார்கள். மேலும் அவரது சட்டையில் இருந்த சீறும்  புலியை பார்த்த ரசிகர்கள் இந்த கெட்டப் ‘STR48 ‘ திரைப்படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

str48
str48

மேலும் சிம்பு நடிக்க இருக்கும் எஸ்டிஆர் 48 என்ற திரைப்படத்திற்கு கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் மிக விரைவாக தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.