“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் பிரபலம் பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ள இருகாங்க.. யார் அது தெரியுமா.? வெளிவரும் தகவல்.

0

சின்னத்திரையில் பல்வேறு வகையான தொலைக்காட்சிகள் இருந்தாலும் அதில் முற்றிலும் மாறுபட்டு காணப்படுவதுதான் விஜய் டிவி தொலைக்காட்சி ஏனென்றால் புது புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொடுத்து நாம் எதிர்பார்க்காத அளவிற்கு நம்மை திருப்தி படுத்துகின்றன. அதில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ரீச்சாகுமா ஆகாதா என ஒரு தயக்கத்துடன் ஆரம்பித்து இருந்தாலும் போகப்போக எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இவை தொடர்ந்து 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது .

இந்நிகழ்ச்சிக்கான பிரோமோக்கள் எல்லாம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றி அதிகாரபூர்வமாக தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் சில தகவல்கள் அப்பப்போ சமூக வலைத்தளங்களில் கசிகின்றன. அந்த வகையில் கோபிநாத் ரவி,ஷாலு ஷாமு, நியூஸ் ரீடர் கண்மணி மற்றும் பலர் புகைப்படங்கள் வெளியாகின அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர் என தகவல்களும் வெளியாகின.

இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது வெளிவந்த தகவல் என்னவென்றால் விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரிஸ் தொடரில் துணை நடிகரான கத்தி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஜீ ஜெயமோகன் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள போகிறார் என சில தகவல்கள் வெளியாகின.

rajee jayamohan
rajee jayamohan

இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் போன்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவர் சீரியலில் துருதுருவென அனைவரிடமும் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டிருப்பார். இப்படிப்பட்ட இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் மற்ற போட்டியாளர்களை சந்தோஷப்படுத்துவத்தோடு மட்டுமல்லாமல் மக்களையும் மகிழ்விப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.