தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, பிகில் திரைப்படத்திற்கு முன்பதிவு உலகம் முழுவதும் ஆரம்பித்துவிட்டார்கள்.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்தது. நான்கு நாட்கள் வரை டிக்கெட் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே ஒரு சில திரையரங்குகளில் விற்றுத் தீர்த்தது. இதனால் பிகில் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டைவிட கேரளாவில் விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள், கேரளாவில் விஜய் ரசிகர்கள் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள் அதேபோல் விஜய் படம் வெளியே வந்தால் அதை பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.
பிகில் கொண்டாட்டத்தின் உச்சமாக படத்திற்காக விஜய்க்கு சிலை செய்து திறப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து மிரட்டி உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்காத இந்த நிலையில் கேரளா ரசிகர்கள் இப்படி செய்வது பிரமிக்க வைத்துள்ளது.
கேரளாவில் தளபதியாரின் சிலை திறப்பு கொண்டாட்டம் ?
தமிழகத்தில் விஜய் பிறந்தாளும்
கேரளா மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பிறந்த குழந்தையாக அண்ணணாக தம்பியாக ஏற்றுக்கென்ட நடிகன்#podravediya #BigilDiwali ??? @actorvijay @Atlee_dir @archanakalpathi pic.twitter.com/kLBCbm3cGk
— பாண்டி?❤? (@PandiyanKpm) October 23, 2019