புஷ்பா 2 திரைப்படத்தில் இணைந்த நட்சத்திர நடிகை.. கிளாமர் இவருக்கு செட்டாகாது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

puspa-
puspa-

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வருபவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் சுகுமாருடன் கைகோர்த்து 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “புஷ்பா”.

இந்த படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு படம் உருவாகி இருந்தது. மேலும் படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் படம் சொந்த மொழியையும் தாண்டி தமிழ், கர்நாடகா, கேரளா அனைத்து இடங்களிலும்  நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 320 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.

அதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி காடு, மலை என அனைத்து இடங்களிலும் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் இந்த படத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜும் மற்றும் நடிகை ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய ஒரு தொகையை சம்பளமாக கொடுத்திருப்பதாக அண்மையில் செய்திகள் எல்லாம் வெளிவந்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நாயகி சாய் பல்லவி புஷ்பா 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் அவர்  சமந்தாவுக்கு பதில் குத்தாட்டம் போட வந்துள்ளாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

எது எப்படியோ சாய் பல்லவி கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் நடிக்க அவர் 10 நாள் கால் சீட் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.