விஜய் டிவியில் பிரபல காமெடி நிகழ்ச்சியாக சீசன் சீசனாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வரும் தொடர் குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையல் சுத்தமாக தெரியாத விஜய் டிவி பிரபலங்களை இறக்கி காமெடி நிகழ்ச்சியாக நடத்தபட்டது.
முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த சீசன் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி எவ்வளவு பிரபலமோ அதுபோல் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்து சினிமாவிலும் பயணித்து வருகின்றன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 சீசன்களாக செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஜட்ஜாக இருந்து வருகின்றனர். தொகுப்பாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் .
அந்த வகையில் சென்ற வாரம் கிரேஸ் கருணாஸ் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அடுத்து மீதம் 7 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அப்படி குக் வித் கோமாளி இந்த வார எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய நெருங்கிய உறவினர்களை இந்த நிகழ்ச்சிக்கு கெஸ்டாக அழைத்து வருவார்கள்.
இந்த மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஸ்ருதிகா இவரது எதார்த்தமான பேசிய மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது இந்த வாரம் ஸ்ருதிகா அவரது கணவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது குக் வித் கோமாளி செட்டில் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.