திரைப்படத்தில் நடிப்பதற்காக வயது வித்தியாசமின்றி நடிக்க களமிறங்கும் ஸ்ருதி ஹாசன்.! இது என்ன புது கொடுமையா இருக்கு.

suruthi
suruthi

தனது அப்பா நடித்த ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வரும் நடிகை தான் சுருதிஹாசன் இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.

அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வர தொடங்கினார் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் காதல் விஷயத்திலும் இவர் அதிக சர்ச்சையில் சிக்கினார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லாபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விட்டது விஜய்சேதுபதியுடன் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து எப்படியோ ஒரு வழியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இவர் தன்னை விட இரண்டு வயது மூத்த நடிகருடன் ஒரு திரைப் படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறாராம் அந்த நடிகர் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் வயது வித்தியாசமில்லாமல் பல நடிகர்களும் நடித்து வருகிறார்கள் அதேபோல் இவர் நடிப்பது ஒன்றும் தப்பில்லை என ஸ்ருதிஹாசனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.