உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா.? ரசிகரின் கேள்விக்கு உடனே பதிலளித்த ஸ்ருதிஹாசன்.

தனது அப்பா நடித்த ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான்  ஸ்ருதி ஹாசன் இவர் கமல்ஹாசன் நடித்த ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இவர் நிறைய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் ஆனால் இவர் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஆனால் அந்த காதல் இவருக்கு கை கொடுக்கவில்லை அந்த நபர் இவரை காதலித்ததோடு சென்று விட்டார்

மேலும் இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தமிழில் ஒரு சில நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு நபரை காதலித்து வந்ததாகவும் ஒரு தகவல் வைரலானது இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இவர் ஒரு விளையாட்டை விளையாடி உள்ளார் அதாவது ரசிகர்கள் இவரிடம் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது போல் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார்.

shruti haasan
shruti haasan

அதேபோல் ரசிகர்கள் பலரும் இவரிடம் பல கேள்விகளை கேட்டு வந்த நிலையில் திடீரென ஒரு ரசிகர் உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா என கேட்டுள்ளார் அதற்கு சற்றும் தாமதம் செய்யாமல் இவர் உடனே எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறிவிட்டாராம் மேலும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment