கொஞ்சம் கூட ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஸ்ருதி ஹாசன்.! இணையத்தில் வெளிவந்த புதிய புகைப்படம்.!

0

தனது அப்பா நடித்த திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகை தான் ஸ்ருதி ஹாசன் இவர் தமிழ் திரையுலகில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இதற்கு முன்பே இவர் தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமீபகாலமாக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது  இந்த புகைப்படத்தில் இவர் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல்.

பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக தெரிகிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் பலரும் ஸ்ருதி ஹாசன் ஆள் அடையாளமே தெரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.