15 மில்லியன் பாலோவர்ஸ் பெற்றுவிட்ட குஷியில் குத்தாட்டம் போட்ட சுருதிஹாசன்.!!

Sruthi-Hassan happy for her 15 million followers in instagram: தற்போது சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகள் அதிகம் வலம் வருவதை நாம் அறிந்ததே. அந்தவகையில் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்து தற்போது சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆல்பம், கச்சேரி என அனைத்திலும் பாடி கலக்கி வருகிறார். மேலும் இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வலம் வந்ததால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

பொதுவாகவே நடிகர், நடிகைகளுக்கு தங்களது படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற வேண்டுமென்றால் ரசிகர்கள் அதிகம் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனை அவரது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

15 மில்லியன் நபர்கள் தன்னை பின்பற்றுவதாக கூறி  பதினைந்து என நம்பர் உள்ள பலகை ஒன்றை தனது கையில் வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

shruthi-2
shruthi-2

Leave a Comment