பேரும்,புகழும் இருந்தும் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் இறந்துப்போன ஸ்ரீவித்யா.! நடந்தது என்ன.?

sree-vidya-
sree-vidya-

70 காலகட்டங்களில் இருந்து 2000 ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்து பட்டிதொட்டி ஏங்கும் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. தமிழ் சினிமா உலகில் முதலில் ஹீரோயின்னாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த அந்தஸ்தையும் தாண்டி  சித்தி, அம்மா, குணத்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றியை மட்டுமே சம்பாதித்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

இவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகரின் படங்கள் தொடங்கி இளம் நடிகர்களின் படங்கள் வரை நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் தக்க வைத்துக் கொண்டார் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து அசத்தியவர். கர்நாடக இசை பாடகி எம் எஸ் எல் வசந்தகுமாரின் மகள் அவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா வாழ்க்கையில் பெரிய அளவு ஜெயித்து சொத்து சேர்த்தவர்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டவர் என சொல்லப்படுகிறது.
நடிகை ஸ்ரீவித்யா 1976 ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸ் என்பவரை திருமணம் செய்தார் பின் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார். நடிகை ஸ்ரீவித்யா 2003 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி மூன்று வருடங்கள் கழித்து அக்டோபர் மாதம் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

சினிமாவில் நன்றாக சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என மரணப் படுக்கையில் சொத்துக்களை எழுதி அவரது நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் நடிகை ஸ்ரீவித்யாவின் அந்த கடைசி ஆசை நிறைவேறவில்லை காரணம் ஸ்ரீவித்யா கொடுத்த அந்த நம்பிக்கையானவர் சொத்துக்களை அனாதைகளுக்கு கொடுக்கவில்லை. இதனால் நடிகை ஸ்ரீவித்யாவின் அந்த கடைசி ஆசை இதுவரை நிறைவேறாமல் இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.