நடிகர் யாஷ் பற்றி உண்மையை கூறிய கே ஜி எஃப் பட நடிகை…

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் யாஷ் இவர் கேஜிஎப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார் அந்த அளவிற்கு கே ஜி எஃப் திரைப்படத்தில் ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் யாஷ்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த இரண்டாவது பாகம் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது இதனால் நடிகர் யாஷ் அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் காணப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் திரைப்படத்தில் யாஷ் உடன் இணைந்து ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் நடிகர் யாஷ் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் சில தகவல் ஊடகங்களில் பரவி வந்தது.

இதைப் பார்த்த பல ரசிகர்கள் இது பொய்யான தகவல் இது ஒரு வதந்தி என்று கூறி வந்தார்கள் இந்த நிலையில் இந்த வதந்திக்கு பதிலளித்த நடிகை ஸ்ரீ நிதி செட்டி நடிகர் யாஷ் ஒரு சிறந்த மனிதர் அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் கூட எனக்கு நிறைய ஹெல்ப் செய்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் யாஷ் ஒரு ஜென்டில்மேன் அவரோடு இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. தான் எப்போதும் அவருடைய ரசிகையாகவே  இருப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி செட்டி. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி வெளியிட்ட ட்விட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோ ட்விட்டர் பதிவு.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment