தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா.? இல்லையா.?

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டை உலுக்கி வரும் ஒரு விஷயம் என்னவென்றால் ஸ்ரீமதியின் இழப்புதான்  இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் ஸ்ரீமதியின் அம்மா அவரை யாரோ கொன்று விட்டார்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீமதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது மேலும் ஸ்ரீமதி படித்த பள்ளியின் செயலாளர்  சமீபத்தில் ஒரு பேட்டியில் பள்ளி பேருந்துகள் என்ன செய்தது எதற்காக அதை உடைத்தீர்கள் 3000 மாணவர்களின் சான்றிதழ்களை  நாசம் செய்து விட்டீர்கள் அந்த மாணவர்களின் படிப்பை வீணாக்கி விட்டீர்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஸ்ரீமதியின் அம்மா தான் இது அனைத்திற்கும் அவர் பதில் கூற வேண்டும்  ஸ்ரீமதி படித்த பள்ளியின் செயலாளர் கூறியுள்ளார்.  இந்த நிலையில் தனியார் பள்ளி சங்க அமைப்பு சிலர் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அகில இந்திய நர்சரி பிரைமரி சிபிஎஸ்சி  ஆகிய பள்ளிகள் சங்கம் நிராகரித்துள்ளது பாரதிய ஜனதா ஆதரவு பெற்ற சில சங்கங்கள் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தை அறிவித்திருப்பதாகவும்.

மாணவர்களின் நலம் கருதி வழக்கம்போல் தனியார் பள்ளிகள் நடைபெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகள் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக விடுமுறை அளித்தால்  சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பள்ளிகள் கல்வி சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment