தொடங்கியது ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்.! வைரலாகும் வீடியோ

கடந்த ஜூலை 13ஆம் தேதி தற்கொலை செய்யப்பட்டதாக கூறிய ஸ்ரீமதியின் உடலை பல பிரச்சனைக்கு பின் அவருடைய உடல் இன்று இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அவருடைய தாய் கதறி அழும் காட்சி நேரலையின் மூலம் நாம் அனைவரும் பார்க்கலாம்.

நீதி கேட்டு கிட்டத்தட்ட 10 நாட்களாக ஆகிய நிலையில் எதற்காக இந்த மாணவி இறந்தார் என்று இதுவரைக்கும் தெரியவில்லை. இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பல போராட்டங்கள் நடந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அது மட்டுமல்லாமல் அந்த சக்தி ஸ்கூலில் இருந்த பஸ் டேபிள் சேர் என அனைத்தையும் கலவரத்தில் எடுத்து விட்டனர். மேலும் அந்தப் பள்ளி நிறுவனம் இதுவரைக்கும் விடுதி சான்றிதழ் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல போராட்டங்களை தாண்டி தனது மகள் உடலை கைப்பற்றி இறுதி ஊர்வலத்தின் போது கதறி அழுகும் தாயின் கதறல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இறுதி ஊர்வலத்தின் போது எந்த ஒரு கலவரமும் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறை அங்கு குவிந்துள்ளனர். இந்த இறுதி ஊர்வலத்தை பார்த்த பலரும் இதுபோன்ற எந்த ஒரு சேதமும் இதற்குப் பிறகு இருக்கக் கூடாது என்று இறைவனிடம் வேண்டுகிறோம் என்றும் கூறி வருகின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு உடல் பரிசோதனை நடந்து முடிந்தும்  ஸ்ரீமதியின் வழக்கை இன்னும் உயர்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் இன்று துவங்கி உள்ளது.

இதோ அந்த வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment