அங்க இங்க சுத்தி அஜித் பக்கம் திரும்பிய ஸ்ரீ ரெட்டி.! என்ன சொன்னார் தெரியுமா.?

0
ajith sri reddy
ajith sri reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தினார், இவருக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள் என பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து ஸ்ரீரெட்டி சென்னை பக்கம் குடியேறினார், அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்பந்தப்பட்டவரை கதிகலங்க வைத்து விடுவார், அந்த வகையில் தமிழ் சினிமாவில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ், எனப் பலரையும் கதிகலங்க விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி இடம், நீங்கள் திரைஉலகில் முத்தம் கொடுக்க வேண்டும் என மனதார விரும்பினால் அது யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காத ஸ்ரீரெட்டி அன்பின் பாசம் வெளிப்பாடான ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு தான் கொடுப்பேன் என கூறினார்.

மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பெண்களின் நிலைமையும் என் வாழ்க்கையும் ஒன்றுதான், அஜித் தான் சினிமா திரையில் ஜாம்பவான் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கேட்டல் ” லெஜெண்ட் ” விருதை அஜித்துக்கு தான் கொடுப்பேன். அத்தோடு அவருடைய காலில் விழுந்து வணங்குவேன்” என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.