அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 4000 திரையரங்குக்கு மேல் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது, இன்று அதிகாலை காட்சி நேற்றுவரை அனுமதி இல்லை என்ன தகவல் வெளியானது ஆனால் பின்பு அரசு அனுமதியுடன் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்தது அதனால் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
பிகில் திரைப்படம் இன்று அதிகாலை காட்சியை அமர்க்களப் படுத்தினார்கள் விஜய் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்துடன் முதல் காட்சியை தொடங்கினார்கள், சென்னை மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் விஜயின் பிகில் சத்தம்தான்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் ஜாப்னாவில் விஜய்யின் பிகில் படத்தின் கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையிலும் விஜயின் பிகிலுக்கு இப்படி ஒரு வரவேற்ப்பு இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
Fort ? #Jaffna #BigilDiwali pic.twitter.com/iSNQ45tSOj
— Ñ Ï V Í (@UPirakash) October 24, 2019