மலிங்காவை தொடர்ந்து மேலும் ஒரு மூத்த வீரர் ஓய்வு.! இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி

0
srilanka_malinga
srilanka_malinga

இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பிரபல வேகப்பந்துவீச்சாளர் குலசேகரா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது ஓய்வை அறிவித்துள்ளார், இவர் வங்கதேசத்துடன் விளையாடும் முதல் போட்டியில் மட்டும் விளையாடுவார் அதன் பிறகு ஓய்வு பெற இருக்கிறார், உலக கோப்பை போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில் சொந்த மண்ணில் கடைசியாக ஒருமுறை விளையாட முடிவெடுத்துள்ளார்.

அதே போல் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது, ஏற்கனவே மூத்த வீரர்கள் இல்லாததால் இலங்கை அணி கொஞ்சம் தடுமாறி வருகிறது இந்த நிலையில் மலிங்காவின் ஓய்வு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு இலங்கை வீரர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் மூத்த வீரரான குலசேகரா தான் தனது ஓய்வை அறிவித்துள்ளார் 2014ஆம் ஆண்டு இலங்கை டி20 கோப்பையை வென்ற போது குலசேகரம் அந்த அணியில் இருந்தார், இந்தநிலையில் 2017 பிறகு இவருக்கு அணியில் விளையாட அனுமதி வழங்கவில்லை.

அதேபோல் குலசேகர இதுவரை 188 ஒரு நாள் தொடரில் விளையாடி உள்ளார் அதில் 199 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், மேலும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதுமட்டுமில்லாமல் டி20 போட்டிகளில்  58 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படி அணியில் சிறப்பாக விளையாடிய குலசேகரா ஓய்வே அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.