தனது ஓய்வை அறிவித்த மின்னல் வேகத்தில் பந்து வீசும் வேகபந்து வீச்சாளர்.! ரசிகர்கள் அதிர்ச்சி

0
malinga
malinga

இலங்கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் லசித் மலிங்கா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இலங்கையில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வரும் லசிக் மலிங்க இதுவரை இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார், அதேபோல் 335 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார், இவர் இலங்கை அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் அதில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்துள்ளார்,
வங்கதேச அணிக்கு எதிராக விளையாட இருக்கும் ஒரு நாள் போட்டியுடன் இவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அந்த அணியின் கேப்டன் கருணாரத்னே வெளியிட்டுள்ளார், இலங்கை அணி கேப்டனிடம் லசித் மலிங்க ஓய்வுபெற இருப்பதாக  கூறியுள்ளார்.

வருகின்ற 26 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்கா விளையாடயிருக்கிறார் இதுதான் அவருக்கு கடைசி போட்டி இதன் பிறகு ஓய்வு பெற இருப்பதால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள் இவர் இலங்கை அணியில் உலககோப்பை போட்டியில் விளையாடிதற்கு காரணம் இலங்கை அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லாததாலும் பவுலர் இல்லாததாலும் தடுமாறி வருகிறது அதனால் தான் உலக கோப்பை போட்டியில் விளையாடினார்.

இதுவரை லசித் மலிங்கா விளையாடிய போட்டிகளில் 101 விக்கெட்களை டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ளார் அதுவும் முப்பது டெஸ்ட் போட்டிகளில், 335விக்கெட்களை 225 ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார், மேலும் டி20 போட்டிகளில் 73  போட்டிகளில் விளையாடியுள்ளார் அதில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், இதில் டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும், டி20 போட்டியில் ஒரு முறையும், ஒருநாள் போட்டியில் 8 முறையும் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக தனது பணியைத் தொடர்வார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.