தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை.! வைரலாகும் புகைப்படம்

0
Sri-Divya
Sri-Divya

நடிகை ஸ்ரீதிவ்யா தனது மூன்று வயதில் இருந்தே சினிமா பயணத்தை தொடங்கி விட்டார், இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 10 தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார் மேலும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அடுத்ததாக சுசீந்திரன் இயக்கிய ஜீவா திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா, இந்த திரைப்படத்தில் இவருக்கு தங்கையாக நடித்தவர் மோனிகா இவர் தற்போது புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் மாதவி அரிசங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. இந்த திரைப்படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார், இந்தத் திரைப்படம் மிக மிக சிறிய பட்ஜெட் திரைப்படம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கடை கடையாக சென்று சோடாபாட்டில் போடும் பெண்ணாக நடித்துள்ளார், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த திரைப்படம் வெளியான பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பட வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார் கோலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை எவ்வளவு அழகு இதோ புகைப்படம்.

sridivya
sridivya