கவர்ச்சிக்கு கண்டிசன் போடும் ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இப்படி.! வீடியோவை பார்த்து தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து அடுத்த இடத்தை பிடித்து விடுகிறார்கள், ஆனால் நடிகைகளால் அப்படி செல்ல முடியவில்லை, ஒரு சில நடிகைகள் ஒருசில திரைப்படத்தில் நடித்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் பட வாய்ப்பு இல்லாமல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரீதிவ்யா, இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் அடுத்த கட்டத்தை அடைய முடியவில்லை.

ஸ்ரீதிவ்யாவுக்கு தற்பொழுது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத நிலையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் இவரும் தற்போது நடிப்பதற்கு இறங்கிவிட்டார்.

இவர் தமிழில் ‘யமுனா’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை, ஆனால் அந்த படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா நடன பயிற்சி பயின்று வருகிறார் சமீபத்தில் இவர் நடன பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவில் ஸ்ரீ ரம்யாவும் நடன மாஸ்டறும்  மிகவும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள், அதனை சுற்றி இருப்பவர்கள் செல்போனில் வீடியோ எடுக்கிறார்கள் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment