தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ரீதேவி அன்றிலிருந்து மறையும்வரை நடிகையாகவே வாழ்ந்தவர், தமிழில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தியவர்.
அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார், இவரின் மரணம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதேபோல் இவரின் மரணத்திற்குப் பல சர்ச்சைகளும் எழுந்தது. இந்தநிலையில் ஸ்ரீதேவிக்கு ஒரு உடன்பிறந்த தங்கை ஒருவர் இருக்கிறார் அவரின் பெயர் ஸ்ரீலதா.
ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீலதா அவர்களுக்கும் சரியான பேச்சு வார்த்தையே கிடையாது அந்த தகவல் சமீபத்தில்தான் வெளியானது, பலருக்கும் ஸ்ரீதேவியின் தங்கையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஸ்ரீதேவி போலவே சினிமாவில் நடித்து மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என ஸ்ரீலதா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரீ லதா அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டிலானர்.

அக்கா ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீலதா விற்கும் இடையே சொத்து தகராறு இருந்ததால் பல வருடங்களாக பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்துள்ளது, அதனால் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி தனது தங்கையும் பார்த்து வரவேண்டுமென கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஸ்ரீதேவியின் மரணம் ஸ்ரீலதாவை பெரிதும் அதிர்ச்சி ஆக்கியது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் தங்கையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்தான் ஸ்ரீதேவியின் தங்கையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
