துளி கூட மேக்கப் இல்லாமல் செம்ம நச்சின்னு இருக்கும் ஸ்ரீதிவ்யா.! புகைப்படம் இதோ.

0

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் ஹீரோயினாக மாறிய நடிகை ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவில் பிறந்த இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகதெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்தார் அதன்பின் தெலுங்கல் ஒரு சில படங்களில் மீண்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் விளைவாகவே அவர் 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தமிழ் திரைப்படத்தில் லதா பாண்டி என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் படத்திலேயே யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார்.

அந்தவகையில் இவர் ஜீவா வெள்ளைக்காரதுரை காக்கி சட்டை மருது போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இவர் இதுவரையிலும் சினிமாவில் கவர்ச்சி காட்டியது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதனை தற்போது  வரையிலும் சினிமா உலகில் பின்பற்றி வருகிறார் இருப்பினும் தற்போது சரியான படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் இருக்கிறார்.

மேலும் சமூக வளைதளத்தில் பெரும்பாலும் இவர் ஆக்டிவாக இருந்ததில்லை என்றே கூற வேண்டும் இப்படி இருந்த  ஸ்ரீதிவ்யா தற்போது தனது திசையை மாற்றி உள்ளார் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தக்க வைத்துக் கொள்ள இதுபோன்று செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுயுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்கள் மேக்-அப் இல்லாமலே ஹீரோயின் போல்  இருக்கிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

#happymorning ?

A post shared by Sri Divya (@sd_sridivya) on