தமிழகத்தில் டாப் நடிகர் படங்களுக்கு இணையாக வசூல் செய்த ஸ்பைடர்மேன் – இதுவரை அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.? ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.

மக்கள் மற்றும் ரசிகர்கள் தனது சொந்த மொழி படங்களையும் தாண்டி மற்ற மொழிப் படங்களையும் பார்த்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் அந்த காரணத்தினால் ஹாலிவுட் படங்கள் கூட தற்போது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

அந்த வகையில் அண்மையில் வெளிவந்த  spider man no way home உலக அளவில் பல மொழிகளில் வெளியானது. தமிழிலும் இந்த திரைப்படம் வெளியாகி நல்லாவே கல்லா கட்டி வருகிறது.

இதுவரை பல்வேறு பைடர் மேன் திரைப்படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து மக்கள் மத்தியில் நன்றாகவே வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் 3 ஸ்பைடர் மேன் கள் ஒரு படத்தில் நடித்து அசத்திய தான் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே உச்சத்தில் இருந்தது.

அண்மையில் வெளிவந்த ஸ்பைடர் மேன் இந்த திரைப்படம் இதுவரை 4000 கோடிக்கு மேல் வசூலித்து நல்லதாகவே ஓடிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில் கூட இந்த திரைப்படத்தின் வரவேற்பு தற்போது நன்றாகவே இருக்கிறது முதலாவதாக ஸ்பைடர் மேன் திரைப்படம் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியானது மற்ற மொழிகளில் 17ஆம் தேதிதான் உலக அளவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 11 நாட்களில் மட்டுமே சுமார் 29 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களிலேயே ஸ்பைடர் மேன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 30 கோடியை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹாலிவுட் படம் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது மேலும் டாப் நடிகர் படங்களுக்கு இணையாக ஒரு ஹாலிவுட் படம் வசூல் செய்தது ரசிகர்களை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment