கொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி!! அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.!! வைரலாகும் வீடியோ.

0

spb sir final live program video and he said about corona: சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து விரும்பி கேட்கும் பாடல் என்றால் அது எஸ்பிபி அவர்களின் பாடல்தான். இவருக்கு அனைத்துவகை மக்களுமே ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரின் பாடலை கேட்டால் நாம் எந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் அவரின் குரலைக் கேட்டால் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இனிமையானவர்.

பாடகர் எஸ்பிபி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவ பலனின்றி காலமானார். இந்த செய்தி அவர்களின் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக கலந்து கண்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளார்.  அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம், அது நாம் செய்த பாவம் தான், நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள், ஆனால் நாம் இயற்கையை மாசுபடுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்கிறோம், நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்தி விட்டோம், அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். என அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிபி அவர்கள் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இது தான்.  இந்த  வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.