400 கோடிக்கும் மேல் வசூல் அள்ளிய தென்னிந்திய சினிமா படங்கள் – லிஸ்டில் இடம் பெற்றுள்ள “தமிழ் ஹீரோ படங்கள்”.!

தென்னிந்திய சினிமா உலகில் சமீபகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன அந்த படங்கள் அந்த பட்ஜெட்டையும் தாண்டி அதிக அளவு வசூல் செய்து புதிய சாதனை படைக்கின்றனர் அதனால் தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவையே முந்தி ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு பேச்சு வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி 2 அண்மையில் வெளிவந்த RRR ஆகிய படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது ஆனால் அதையும் தாண்டி சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் லல்லி  புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படங்களை போல  கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான KGF 2 திரைப்படமும் நல்லதொரு வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது.

இப்படி தென்னிந்திய சினிமாவில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் தான் அதிகம் வசூலித்த படங்களாக இருந்தாலும் அந்த படங்களுக்கு நிகராக தமிழ் படங்களும் 1, 2 நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது அதன்படி பார்க்கையில் தமிழ் சினிமாவில் வெளியான ரஜினியின்  2.0 அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் போன்றவை அதிகம் வசூல் செய்த திரைப்படங்களாக இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் தென்னிந்திய சினிமாவில் 400 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதுகுறித்து தற்போது விலாவரியாக நாம் பார்ப்போம்.

முதலிடத்தில் பாகுபலி 2, KGF 2, RRR, ரஜினியின் 2.0, பாகுபலி, சாஹா, கடைசியாக  கமலின் விக்ரம். இந்த திரைப்படங்கள் தான் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய திரைப்படங்களாக இருக்கின்றன இந்த லிஸ்டில் அஜித், விஜய் போன்றவர்கள் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Exit mobile version