இன்ஸ்டாகிராமை கட்டியாளும் தென்னிந்திய நடிகர், நடிகைகள்.? ரசிகர்கள் மத்தியில் முதலிடம் பிடித்த பிரபலம் யார் தெரியுமா..

tamil actress
tamil actress

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் கூட சினிமா நேரம் போக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சொல்லப்போனால் பெரும்பாலும் நடிகைகள்தான் சமூக வலைதளப் பக்கங்களை பெரிதாக பயன்படுத்துவார்கள்.

ஆனால் அண்மைகாலமாக நடிகைகளையும் தாண்டி டாப் ஹீரோக்களும்  இன்ஸ்டாகிராமில் தனது கணக்குகளை ஓபன் செய்து உள்ளனர். அந்த வகையில் ரஜினி தொடங்கி இளம் நடிகர்கள் கூட ஆரம்பத்திலேயே இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி ரசிகர்களை வளைத்துப் போடுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். குறிப்பாக இன்றைய தேதியில் அதாவது 31.05. 2022ல் தமிழ் நடிகர்கள் வைத்திருக்கும் ஃபாலவர்ஸ் விவரங்கள் குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

முதல் இடத்தில் நடிகை சமந்தா இருக்கிறார். இவர் அண்மைகாலமாக சினிமாவிலும் சரி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சரி கிளாமரான புகைப்படங்களை அள்ளிவீசி அசத்துகிறார் இதனால் இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இவரை தற்பொழுது 23.7 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் இரண்டாவது இடத்தில் நடிகை காஜல் அகர்வால் உள்ளார்.

காஜல் அகர்வால் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக நடிப்பார். மேலும் கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து நடிப்பார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவதால் இவரைப் பின்பற்றுவோரின்  எண்ணிக்கை அதிகரிக்கிறது இதுவரை 22.7  மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

மூன்றாவது இடத்தில் சுருதிஹாசன் 19.9 மில்லியன், நான்காவது இடத்தில் தமன்னா 16.6 மில்லியன், ஐந்தாவது இடத்தில் கீர்த்தி சுரேஷ் 13 மில்லியன், ஆறாவது இடத்தில் சிம்பு 8.3 மில்லியன், ஏழாவது இடத்தில் சாய்பல்லவி 5.6 மில்லியன், எட்டாவது இடத்தில் ஹன்சிகா 5.6 மில்லியன், ஒன்பதாவது இடத்தில் அனிருத் 5.6 மில்லியன், அனுஷ்கா செட்டி 5.5 மில்லியன், சிவகார்த்திகேயன் 4.7 மில்லியன், அமலாபால் 4.4 மில்லியன், சூர்யா 4.4 மில்லியன், தனுஷ 4.2 மில்லியன், துரு விக்ரம் 2.7 மில்லியன், விக்ரம் 1.3 மில்லியன், ஆர்யா 1 மில்லியன், ரஜினிகாந்த் 834k