தென் இந்தியாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் என்ன தெரியுமா.?

0
ajith rajini
ajith rajini

தமிழ் சினிமாவில் தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால் முதல் நாள் யாருடைய திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்ற வாக்குவாதம் ரசிகர்கள் இடையே இருக்கும். அந்தவகையில் இந்த வருடம் வெளியாகிய தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

முதலில் இந்த வருடம் தொடக்கத்தில் தல அஜித் நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை சிவா இயக்கியிருந்தார், இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 16.50 கோடி வரை வசூல் செய்திருந்தது, இதுவரை வெளியாகிய எந்த திரைப்படமும் இந்த வசூலை முறியடிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் சசிகுமார் விஜய் சேதுபதி சிம்ரன் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த  திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார், இந்த திரைப்படம் கர்நாடகாவில் முதல் நாளில் 3 கோடி வசூல் செய்தது, இந்த திரைப்படத்தின் வசூல் இன்னும் எந்த திரைப்படமும் அங்கு முறியடிக்க முடியவில்லை.

அதேபோல் சூர்யா மோகன்லால் ஆர்யா-சாயிஷா, ஆயர்கள் நடிப்பில் வெளியாகி திரைப்படம் காப்பான் இந்த திரைப்படத்தை கே வி ஆனந்த் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் கேரளாவில் மட்டும் 1.36 கோடி வசூல் செய்தது, முதல் நாளில். முதல் நாளில் அதிக வசூல் பெற்ற இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் முதலிடத்தில் பிடித்துள்ளது.