என்னாது 7 சிக்ஸ் அடிச்சிட்டாரா.? இந்த செல்லத்த தூக்கி நம்ம டீம்ல போடு.! ரிஷப் பண்ட் க்கு ஆப்பு வைத்த இளம் வீரர்.

0
rishap pant
rishap pant

தோனிக்கு பிறகு இந்திய அணியில் நிரந்தர விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ரிஷப் பண்ட்  ஆனால் இவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ரன் குவிக்க வில்லை.

அதேபோல் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி இடம்பெற்று விளையாடியது, இந்த போட்டியில் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடிய தேர்வாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். இதுவரை இவர் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார் முதல் போட்டியில் ஒரு ரன்களுடன் ஏமாற்றினாலும் இரண்டாவது போட்டியில் 48 பந்துகளில் 91 ரன் அடித்து அதிரடி காட்டி உள்ளார்.

20 ஓவர் ஆக இருந்த அந்த போட்டியில் 7 சிக்சர்கள் மற்றும் 6 போர் அடித்து அசத்தியுள்ளார், ரிஷப் பண்ட் உடன் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே எதிர்பார்ப்பு இவரிடமும் இருக்கிறது, இவர் அடித்த சிக்சர்கள் இவரை அடையாளம் காட்டியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளார் ரிஷப் பண்ட்.

அதனால் ரிஷப் பன்ட் மீது விமர்சனம் எழுந்துள்ளது, அதனால் 7 சிக்சர் அடித்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அதனால் தென்னாபிரிக்கா டி20 தொடரில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது ரிஷப் பண்ட் ஓய்வு கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க படுமா இந்திய அணி? இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் இருக்கிறது.