தென்னாப்பிரிக்க வீரர்களை திணறடிக்கும் ரோஹித் சர்மா – மாயன்க் அகர்வால்

0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று துவங்கியது. இதனிடையே முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் இந்திய அணி 202 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தில், மாயன்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். அதே சமயம் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.