சச்சின், தோனியை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.! இதொ அதிகாரபூர்வ அறிவிப்பு.

0

இந்திய அணியில் பல சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் இதனால் சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் தோனி சச்சின் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த இடது கை ஆட்டக்காரர்களின் வரிசையில் முதல் ஆளாக இருப்பவர் இவர்தான். இவர் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகவும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று கொடுத்தவர். ஆனால் ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மேட்ச் பிக்சிங் என கிரிக்கெட் அணி தள்ளாடிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே அவ்வளவுதான் முடிந்துவிட்டது என எண்ணி கொண்டிருந்தபொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் பேசிய சமயத்தில் அணி தலைவருக்கான பொறுப்பை ஏற்று புதிய கிரிக்கெட் அணியை கூட்டமைத்து சவாலான போட்டிகளை அனைத்தும் வெற்றி பெற்று தனது கொடியை நாட்டியவர்.

இன்றைய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, மஹேந்திர சிங் தோனி, ரோகித்சர்மா ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா என பல வீரர்கள் எப்படியோ அதை விட அதிகமாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு பெருமை சேர்த்து இந்திய அணிக்காக துணை நின்றவர்கள்.

இந்தநிலையில் சவுரவ் கங்குலி தற்போது இந்தியாவின் பிசிசிஐ தலைவராக பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது இதனைத் தொடர்ந்து முன்னணி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் பயோபிக் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்திற்கு சபாஷ் மித்து என பெயரிட்டு உள்ளார்கள். இந்த திரைப்படத்தில் டாப்ஸி அவர்கள் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான luv பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிட்டுள்ளார்கள் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் சவுரவ் கங்குலி வேடத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.