தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காமெடி நடிகர்கள் மட்டுமே கதாநாயகனாக நடித்து பிரபலமடைகிறார்கள் அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து காமெடி நாயகனாக நடித்து தற்போது கதாநாயகனாக நடித்து பிரபலம் அடைந்துள்ளவர் நடிகர் சூரி.
இவர் சமீபத்தில் மாமன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது மதிமாறன் புகழ்ந்து இயக்கத்தில் மண்டாடி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
படத்தை எல்ரட் குமாரின் ஆர் எஸ் இன்ஃபோ நிறுவனம் தயாரிக்கிறது கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். அதேபோல் படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார் மீனவர்களின் படுகு ரேசை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இணையதளத்தில் சூரியை டேக்ஸ் செய்து அன்புள்ள சூரி அண்ணா உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடைபெறுகிறது அது மிக மகிழ்ச்சி இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களை உங்கள் பவுசர்கள் கொஞ்சம் கடுமையாக நடத்துகிறார்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதற்கு சூரி தம்பி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இதை தயாரிப்பு குழுவை நடமும் பவுன்சர் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கணவனத்துடன் இருக்க சொல்கிறேன் எப்பொழுதும் உங்கள் அன்பு எனக்கு பலம் என பதில் அளித்துள்ளார் சூரி.