சூரியின் வொர்க் அவுட் வீடியோ!! வெற்றிமாறன் திரைபடத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் சூரி!! அதற்காகவா.

0

soori video viral:தற்போது உள்ள காமெடி நடிகர்களில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் குள்ளநரி கூட்டம்  திரைப்படத்தில் பரோட்டா காமெடியின் மூலம் பிரபலம் அடைந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலானோர் பரோட்டா சூரி என்று தான் அழைப்பார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது காமெடி நடிகர்களாக வலம் வந்த பல காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். உதாரணமாக வடிவேலு, சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோரை கூறலாம். ஆனால் சூரி நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை காமெடியில் கலக்கி அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற சீம ராஜா திரைப்படத்தில் சூரி தனது சிக்ஸ் பேக்கை காட்டி அனைத்து தரப்பு மக்களையும் மிரல வைத்தார். இதற்காக பல ஹார்டு வொர்க் செய்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது சூரி அசுர இயக்குனர் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

தற்பொழுது சூரி வீட்டில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவரின் ஹார்டு வொர்க்கை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்த் உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Back to Gym 💪🏋️‍♂️ #reels

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

soorimuthuchamy
soorimuthuchamy