சாக்கடை அள்ளுகின்ற வண்டியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன்.! பெரிய பெரிய கட்டிடங்களில் என் கைப்படாத இடமே இல்லை..! நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு காமெடி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் சூரி இவர் பரோட்டா காமெடியில் நடித்ததால் இவரை பரோட்டா சூரி என பலரும் அழைத்து வந்தார்கள். ஒரு காலத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அப்பொழுது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்பொழுது பரோட்டா சூரி கால்ஷீட் கிடைக்காமல் பல இயக்குனர்கள் தடுமாறுகிறார்கள் அதற்கு காரணம் அவரின் வளர்ச்சிதான். பரோட்டா சூரி காமெடியனாக  மட்டுமல்லாமல் தற்பொழுது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ஹீரோவாக இவர் நடித்த விடுதலை, மற்றும் கருடன் விடுதலை 2, மாமன், ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் நிலையில் சமீபத்தில் பரோட்டா சூரி மேடையில் பேசியது ரசிகர்களிடையே கண் கலங்க வைத்துள்ளது. பரோட்டா சூரி சினிமாவில் வருவதற்கு முன்பு லாரி கிளீனர் ஆக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறிது காலம் சாக்கடையை அள்ளுகின்ற வண்டியில் வேலை செய்தாராம் அது மட்டும் இல்லாமல் பெயிண்ட் அடிக்க சென்றாராம் சென்னையில் இருக்கிற பெரிய பெரிய கட்டிடங்களில் இவர் கைப்படாத இடமே கிடையாது என அவரே பேட்டியில் கூறி இருந்தார்.