காமெடி நடிகர் பரோட்டா சூரி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் செம ஸ்டைலிஷ் ஆக உட்கார்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமாவைப் பொறுத்தவரை வெறித்தனமான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் சாதிக்க முடியும் என பலர் எடுத்துக்காட்டாக இருந்து உள்ளார்கள் அந்த வகையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மதுரையில் இருந்து சென்னை வந்து தங்க கூட இடமில்லாமல் சாப்பிடவும் முடியாமல் பல நாட்கள் பட்டினியாக கிடந்து கிடைத்த வேலைகளை செய்து தன்னை ஒரு காமெடியனாக சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டார்.
இடைப்பட்ட காலத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்த பொழுது. பரோட்டா சூரி ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தினார். இவரின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரி அவர்களை ஹீரோவாக நடிக்க வைத்தார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் தான் ஒரு ஹீரோ என்று எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் தன்னை தேடி வரும் கதாபாத்திரங்கள் தனக்கு செட் ஆகுமா ஆகாதா தெரி்து கொண்டு அதில் நடித்து வந்தார்.
அதேபோல் பரோட்டா சூரி சமீபத்தில் நடித்த கருடன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது, அடுத்ததாக கொட்டு காலி என்ற திரைப்படமும் சூரிக்கு கைகொடுக்கும் என தகவல் வெளியானது இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார் காமெடி நடிகனாக இருந்து தற்பொழுது முழுக்க முழுக்க ஹீரோ மெட்டீரியலாக மாறியுள்ளார்.
சமீபத்தில் சூரி அமெரிக்கா சென்று உள்ளார் அங்கு லால் வேகாசில் இருந்து செம ஸ்டைலிஸான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் ஹீரோவுக்கு நிகராக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.