சூரரைப் போற்று திரைப்படத்தில் உண்மையிலே பெண்ணாக வந்தவர் பைலட் தானா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0

சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த படம் தீபாவளியை முன்னிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படம் வந்த முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் இதுவரை வாங்கி வருகிறது.

சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்து அசத்தியிருப்பார் இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் இருந்து பல பிரபலங்கள் இந்த படம் 100 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைக்கப் போகிறது என்று கூறி வருகிறார்கள்.

சூரரைப்போற்று படத்தை முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

சூரரைப்போற்று திரைப்படத்தில் இறுதியாக படம் முடிய போகும் நிலையில் ஒரு பெண் பைலட் என்ற கௌரவத்தோடு ஸ்டைலாக நடந்து வருவார்.

ஆனால் ரசிகர்கள் பலரும் அவர் ஒரு பைலட் என்று நினைத்திறுக்கமாட்டார்கள்  உண்மையிலே அவர் ஒரு பைலட்  அந்தப் பெண்ணின் பெயர் வர்ஷா நாயர் ஆகும்.

இவருக்கு கேரளாவில் பூர்வீகம் இருந்தது ஆனால் இவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார் இதனையடுத்து இண்டிகோ விமான சேவையில் பைலட்டாக பணியாற்றி வருகிறார்.

ஆனால் திரைப்படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் சுதாகொங்கரா அவரை அணுகிய போது அவருக்கு மரியாதை தந்து இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.