சினிமா உலகில் வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் திரையுலகில் உச்சத்தில் இருப்பார்கள். அப்படி பட்டவர்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் அவரது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வரும் அப்போது வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையில் ஏதாவது ஒரு சீரியலில் தலை காட்டுவது பிரபலங்களின் வழக்கம்.
பல முன்னணி நடிகர், நடிகைகள் சீரியலில் நடித்து தற்போது செம்ம கெத்து வலம் வருகின்றனர். அந்த வகையில் குணச்சித்திர கதாபாத்திரம், கவர்ச்சி போன்ற பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சோனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்த மூன்று திரையுலகிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்தார்.
தமிழில் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் வெளிவந்த குசேலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடி நடித்தார். மேலும் கோ, குரு என் ஆளு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சோனா சினிமாவையும் தாண்டிய சொந்தமாக யுனிக் ஃபேஷன் கடையும் வைத்துள்ளார்.இந்நிலையில் சோனா கடைசியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளிவந்த chasing என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சில ஆண்டுகளாக பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் திடிரென சின்னத்திரை பக்கம் தலை காட்டி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், அதாவது அபி டெய்லர் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த சீரியல் சமீபத்தில்தான் அறிமுகமானது. இதனைத்தொடர்ந்து சோனா சின்னத்திரை இன்னும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
