நடு ரோட்டில் பைக்கை ஓட்டி ரசிகர்களிடம் திட்டு வாங்கிய ரஜினி பட நடிகை வைரலாகும் வீடியோ.

நடிகை சோனாக்ஷி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் ரஜினி நடித்த லிங்கா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார், இவர் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்பு அமையவில்லை.

இவர் நடித்த லிங்கா படமே இவருக்கு முதல் திரைப்படமாகவும் கடைசி திரைப்படமாகவும் அமைந்துவிட்டது. தமிழில் அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுவார். அந்த வகையில் தற்பொழுது போக்குவரத்து நெரிசல் உள்ள ரோட்டில் பைக் ஓட்டி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அந்த வீடியோவை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அதை பார்த்த ரசிகர்கள் பைக் ஓட்டுவது தப்பு இல்லை ஆனால் பாதுகாப்பிற்காக அவரது பாடிகாட் அவரை சுற்றி ஓடி வந்து ட்ராபிக் ஏற்படுத்தியதுதான் கடுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் பதிவு செய்தார்கள்.

மேலும் சில ரசிகர்கள் பைக் ஓட்டும் ஆசையை இருந்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாத ரோட்டில் ஓட்டுங்கள் இப்படி ட்ராபிக் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என அவரை விளாசி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=SeWeTOJ-WkA

Leave a Comment