அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகன்.! லேட்டஸ்ட் தகவல் இதோ.!

தமிழில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேதாளம், விவேகம், விஸ்வாசம் நேர்கொண்டபார்வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவந்த நிலையில் தற்போது இரண்டரை வருடங்கள் கழித்து உருவாகியுள்ள இந்த வலிமை திரைப்படம்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வலிமை திரைப்படம் ஹேட்ச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரோஷி, பகத் பாசில், குக் வித் கோமாளி புகழ், விஜே மகேஸ்வரி, சைத்ரா ரெட்டி கார்த்திகேயா போன்ற பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் வரும் 24 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களிலும் வலிமை படத்தின் டிக்கெட்டுகள் பெரும் அளவில் விற்பனையாகி வருகின்றன.  அதனால் தற்போது ரசிகர்களிடையே படத்தின் வரவேற்பு பெருமளவு இருக்கும்  பட்சத்தில் உள்ளன. இந்த நிலையில் தற்போது வலிமை படம் குறித்து  ஒரு சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் வலிமை திரைப்படத்தில் பிரபல நடிகரின்  மகன் நடித்துள்ளாராம். ஆம் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளாராம். மேலும் விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment