அஜித்தை தொடர்ந்து அவரது மகன், மகள் நடிக்க வருவார்களா.. ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.!

ajith-and-family-
ajith-and-family-

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை,வலிமை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது தனது 61 மற்றும் 62-வது திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

அஜித்தின் 61வது ஹச். வினோத் திரைப்படத்தை இயக்க உள்ளார் 62 வது படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி இருந்தாலும் இன்னொரு படத்தை கொடுக்க முனைப்பு காட்டி வருகிறார் அந்த வகையில் வினோத் இயக்கமும் 61வது திரைப்படத்தை குறைந்தது நான்கைந்து மாதங்களிலேயே எடுத்து முடித்து விட்டு ஒரு நல்ல நாளில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா உலகில் தொட்ட எல்லாத்தையும் வெற்றியைக் கண்டு வரும் அஜித். தனது மகன் மகளை சினிமா உலகில் நடிக்க வைப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ரொம்ப நாளாக இருந்து வருகிறது. அஜித்தை தொடர்ந்து அவரது மகன் மகள்கள் சினிமா உலகில் நடிக்க வாய்ப்பே இல்லை எனக்கூறப்படுகிறது அண்மையில் கூட இயக்குனர் வெங்கட்பிரபு பேட்டி ஒன்றில் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதிலளித்தது.

அவர் குடும்ப விஷயத்தில் பிசியாக இருக்கிறார் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறினார். எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை தனது குடும்பத்தையும் அதில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப வில்லை சினிமாவில் இருந்து தள்ளி வைக்கதான் அவர் முயற்சி செய்கிறார்.

அஜித்தும் சினிமா உலகில் நடிப்பதற்கு விரும்பவில்லை தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அஜித் தற்போது நடித்து வருவதாக கூறப்படுகிறது இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு அஜித் நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளார் என்ற ஒரு தகவல் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது மட்டும் தெரியவில்லை.