தளபதி விஜய் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள்.!

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ திரை படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது

லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் விஜய் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்..

நடிகர் விஜய் ஒருமுறை வெளிநாட்டிற்கு சென்ற போது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருந்த வீட்டை பார்த்துவிட்டு அதேபோல நீலாங்கரையில் வீட்டை கட்டினார்.

அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பில்லா இந்த படத்தில் வரும் மை நேம் இஸ் பில்லா பாடலை பல காலங்களாக ரிங்டோனாக விஜய் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஆக்சன் படம் நான் சிகப்பு மனிதன் இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இதுபோல விஜயகாந்தின் செந்தூர பாண்டி படத்திலும் ஒரு  நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த படங்களிலேயே வசீகரா திரைப்படம் தான் ரஜினிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும்.

விஜய் ஒரு தடவை  coca cola விளம்பரத்தில் நடித்திருந்தார் சில வருடங்கள் கழித்து கத்தி படத்தில் coca cola வை எதிர்த்து பேசியிருப்பார் இது குறித்து ரசிகர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி கேட்ட பொழுது அதற்கு விஜய் ரீப்ளே செய்து இருந்தார் அவர் சொன்னது.. தவறுகளை திரித்துக் கொள்கிறேன் நானும் சாதாரண மனிதன் தானே என சொல்லி இருந்தார்.