கமலஹாசனை பற்றி மக்களுக்கு தெரியாத சில விஷயங்கள்.!

Kamal : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இப்பவும் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கமல் கடைசியாக நடித்த விக்ரம்  வெளிவந்து 400 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டதை தொடர்ந்து அடுத்து ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து  கல்கி மற்றும் ஹச். வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார் இந்த நிலையில் கமலை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை பற்றி பார்ப்போம்..

1. தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை கமலஹாசன் பெற்று உள்ளார்.

2. கமலஹாசன்  நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு அனிமேஷன் காட்சியை பார்த்து தான் தன்னுடைய கில் பில் திரைப்படம் அனிமேஷன் காட்சியை வைத்ததாக அந்த படத்தை இயக்குனர் QUENTIN TARANTINO கூறியுள்ளார்.

3. உலக நாயகன் கமலஹாசன்  மொத்தம் 8 மொழிகளில் பேசக்கூடியவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, பிரெஞ்சு மற்றும் ஹிந்தி என தெரியுமாம் .

4. கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஹேராம், இந்தியன், குருதிப்புனல், தேவர்மகன், நாயகன், சிற்பிக்குள் முத்து, சாகர்  என ஏழு திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கார் நாமினேஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

5. கமல் இதுவரை நான்கு தேசிய விருதுகள், 19 ஃபிலிம் ஃபயர் விருதுகள், 9 தமிழ்நாடு மாநில விருதுகள் மட்டுமின்றி பத்மஸ்,ரீ பத்ம பூஷன், செவாலியர் என தனது திரையுலக வாழ்நாளில் பல விருதுகளை வாங்கி உள்ளார்.