ரஷ்யாவில் “வலிமை” படக்குழு ஷூட்டிங் நடத்திய போது எடுக்கப்பட்டு சில புகைப்படம் வெளிவந்து உள்ளன.? அஜித்துடன் யார் யார் இருகாங்க பாருங்கள்.

ajith
ajith

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பாட்டாளத்தை வைத்திருக்கும் டாப் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறந்த முறையில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் ஆகியோர்களைத் தொடர்ந்து அந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் தல அஜித்.

வருடத்திற்கு ஒரு படத்தை தனது ரசிகர்களுக்காக சிறப்பான முறையில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்தவகையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு “வலிமை” திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஹச். வினோத் என்பவர் இயக்கி உள்ளார். முதலில் இந்த திரைப்படம் தீபாவளியை தான் குறி வைத்தது.

ஆனால் தேதியில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களும் ஒரே தேதியில் மோதினால் வசூல் பாதிக்கப்படும் என்ற கருத்தை சரியாக புரிந்து கொண்டு வழிபடும் பின்வாங்கியது வலிமை படம்.  அடுத்த பொங்கலுக்கு ஒரு வழியாக தனது ரசிகர்களை சந்தோஷப்படுத் ரெடியாக இருக்கிறது.

தல ரசிகர்களும் நாங்கள் விட்டுக் கொடுத்தாலும் கெத்தாக இருப்போம் என்பது போல சந்தோஷத்தில் இருக்கின்றனர். வலிமை படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ளவும், உற்சாகப்படுத்தவும் வலிமை படத்திலிருந்து ஹச். வினோத் அப்டேட்டை கொடுத்து வருவதோடு பல பேட்டிகளில் வலிமை படம் எப்படி உருவானது என்பது குறித்தும் அவர் கூறிவருகிறார்.

இது போதாத குறைக்கு அஜித் அடுத்த படத்தில் கமீட் ஆகாமல் இந்திய முழுவதையும் பைக்கில் சுற்றி பார்த்து கொண்டிருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது அப்போது படக்குழுவினருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.