ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போடுட்டு காணாமல் போன எட்டு நடிகைகள்.

பொதுவாக ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் சினிமாவில் நடிக்க வருகிறார்கள். அப்படியே நடிக்க வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்கிறார்கள் மற்ற நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள். அதை போல் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்வார்கள், அந்த வகையில் இதுவரை சினிமாவில் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்து காணாமல் போன எட்டு நடிகைகளை பற்றி இங்கே காணலாம்.

சுசித்ரா – இவர் கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தின் நடித்து பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தில் காதலால் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் என்ற பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

susithra
susithra

லிஸி – விக்ரம் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி சாய்ந்தாடு நெஞ்சத்தழிவு என்ற பாடல் ரசிகர் மத்தியில் பிரபலம்.

lishi
lishi

ரோஷினி- குணா என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் ரோஷினி. இந்த திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களும் கேட்டு மகிழ்ந்த பாடல்.

roshini
roshini

அனுஅகர்வால் இவர் திருடா திருடா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம் என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

anu agarwal
anu agarwal

பிந்தியா – கலைஞன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்தில் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலந்தார்.

Bindiya
Bindiya

மானு- காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் மானு உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

maanu
maanu

கிரிஜா- இதயத்தை திருடாதே என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் கிரிஜா இவர் ஓ பிரியா பிரியா என் பிரியா பிரியா என்ற பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

krija
krija

சோனாலி குல்கர்னி- மே மாதம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்த திரைப்படத்தில் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம்  வேண்டும் என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்து பிரபலமடைந்தார்.

Sonali Kulkarni
Sonali Kulkarni

இப்படி ஒரே திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த எட்டு நடிகைகள் இன்று சினிமாவில் ஜொலிக்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பேரையும் புகழையும் சம்பாதித்து ரசிகர்களை கட்டி போட்டவர்கள்.