லியோ படத்தில் இருந்து வெளியான அதிர்ச்சி தகவலால் அனல் பறக்கும் சோஷியல் மீடியா.! கொந்தளிக்கும் ரசிகர்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் யார் யாரெல்லாம் இணைந்து உள்ளார்கள் என்ற அப்டேட் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் அவருடன் இணைந்து பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட்ட 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி, குருவி, திருப்பாச்சி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் இவர்களுக்காகவே எழுதப்பட்டது போல கச்சிதமாக பொருந்தியது. இதனை தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து மறுபடியும் லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு பேக்கரியில் வேலை செய்வது போல படக்குழு வெளியிட்ட பிரம்மாவில் பார்த்திருப்போம். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மையக்கரு இதுவாக தான் இருக்கும் என்று பலவிதமாக ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி சோசியல் மீடியாக்களில் தளபதி 67 திரைப்படமான லியோ படத்தைப் பற்றி தான் அதிகமாக பேச்சுகள் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷா அவர்கள் லியோ படத்திலிருந்து விலகுகிறாரா என்ற ஒரு சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

அதாவது நடிகை திரிஷா அவர்கள் லியோ படம் தொடர்பாக போடப்பட்ட பல ட்விட்டுகளை பார்த்த திரிஷா ரீட்விட் செய்து இருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தியிருக்காக ரீட்விட் செய்த அனைத்தையும் நீக்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் போடப்பட்ட ஸ்டோரீஸ்யையும் லியோ தொடர்பாக இருக்கும் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

இதனால் ரசிகர்கள் திரிஷா அவர்கள் லியோ படத்திலிருந்து விலகுகிறாரா என்று கூறி வருகிறார்கள். ஆனால் இது உண்மை கிடையாது நடிகை திரிஷா அவர்கள் ட்விட்டூட்டுகளை இரண்டு நாட்களில் நீக்குவது அவரது பழக்கம் அந்த வகையில் தான் அவர் ரீட்விட்டையும் லைக்களையும் நீக்கி இருக்கிறார். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறி வருகிறார்கள் திரிஷாவின் ரசிகர்கள்.

Leave a Comment

Exit mobile version