படபிடிப்பு முடிவதற்குள் சர்தார் திரைபடத்திற்கு இவ்வளவு கிராக்கியா..? கெத்து காட்டும் நடிகர் கார்த்திக்..!

0
karthi
karthi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக். இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொதுத்துள்ளது.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இவர் தற்போது விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

karthi
karthi

மேலும் கார்த்திக் அவர்கள் சர்தார் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்திற்காக  அவரது உடல் தோற்றம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே ஓடிடி உரிமம் மற்றும்  சேட்டிலைட் உரிமங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து மேலும் கார்த்தி அவர்கள் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அதை தற்காலிகமாக கார்த்திக் 24 மற்றும் கார்த்திக் 25 என்று அழைக்கப்படுகின்றன. இதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.