சியான் விக்ரம் “ஹிட் படம்” கொடுத்து இத்தனை வருடம் ஆகிவிட்டதா.?

திரையுலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகளை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் அந்த வகையில் நடிகர் விக்ரம் ஹிட் படம் கொடுத்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அவரை மிகப்பெரிய ஒரு கூட்டமே பின் தொடர்ந்து வருகிறது.

விக்ரம் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பிறகு தனது திறமையின் மூலம் படிப்படியாக வளர்ந்து ஹீரோ அவதாரம் எடுத்தார் அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஹிட் அடித்தது. காரணம் அந்த அளவிற்கு கதைக்கு ஏற்றவாறு தன்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தார்.

அப்படி இவர் நடித்த அந்நியன், ஐ, சேது, பிதாமகன், காசி, ஜெமினி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு நல்ல படங்களில் நடித்தார் இப்படி திரை உலகில் ஜொலித்த இவர் கடந்த சில வருடங்களாக விக்ரம் சோலோவாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படம் ஹிட் அடித்தது. அது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் அந்த படம் வெற்றியை பதிவு செய்தது. விக்ரம் படங்கள் தொடர்ந்து சரிவை சந்திப்பதற்கு முக்கிய  காரணம் என்னவென்று பார்த்தால்.. முதலில் கதை தேர்விலேயே தடுமாறுகிறார்.

ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையை தேர்ந்தெடுப்பதில் சரிவை சந்திக்கிறார் மேலும் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிப்பது பலருக்கும் சொல்லிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி அவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

விக்ரம் சோலோவாக நடித்து வெற்றி கொடுத்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டது. விக்ரம்  சோலோவாக நடித்த அந்நியன் திரைப்படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து வேறு எந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment