காதலர் தின வாழ்த்துக்களை மாறி மாறி பகிர்ந்து கொண்டு க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா-பிரசன்னா ஜோடி.!

தற்பொழுது உலகம் முழுவதும் காதலர் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய காதலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவிற்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ள நிலையில் அந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகா பிரசன்னா இருவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்த இவர்கள் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

sneha prasanna 4

இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ந்து தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சில திரைப்படங்களிலும் நடித்தும் வருகிறார்.

sneha prasanna 3

அந்த வகையில் மம்முட்டி நடிப்பில் கிறிஸ்டோபர் என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவரை அடுத்து நடிகர் பிரசன்னா தற்பொழுது துப்பறிவாளன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

Sneha – Prasanna

இப்படிப்பட்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் நடிகை சினேகா, இது 15 வருட ஒற்றுமை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறி காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரை அடுத்து நடிகர் பிரசன்னா காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், சினேகா என்னுடையவர் மட்டுமல்ல, அவர் என் வீடு, என் இதயம் என், ஆன்மா என், கூடு மற்றும் அனைத்தும் அவர்தான் என்று தெரிவித்துள்ளார்.

SNEHA PRASANNA 1

இவ்வாறு இவர்கள் மாறி மாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக மிகவும் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். சினேகா பிரசன்னா ஜோடி கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது வரையிலும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

SNEHA PRASANNA 2

Leave a Comment

Exit mobile version