தன்னுடைய மகளின் பிறந்தநாள் அன்று நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட சினேகா-பிரசன்னா ஜோடி.!

0
sneha
sneha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா 90 காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார் மேலும் இவருடைய அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட நிலையில் இவரை புன்னகை அரசி என ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பிறகு சில வருடங்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. அதோட மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என இரண்டு சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவரை அடுத்து மறுபுறம் பிரசன்னா தொடர்ந்து படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

sneha prasanna
sneha prasanna

இந்நிலையில் திருமணம் ஆனவுடன் நடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இதனை அடுத்து பெண் குழந்தையும் பிறந்தது. அந்த வகையில் இந்த தம்பதியினர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் சினேகா பிரசன்னா தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா  பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

sneha 09
sneha 09

இந்த நிலையில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் வகையில் பிரசன்னா சினேகா தம்பதியினர் இன்றிலிருந்து கொஞ்ச நாளில் நீ வளர்ந்து விடலாம்! ஆனால் என் இதயம் எப்பொழுதும் உன்னுடன் இருக்கும் இன்றிலிருந்து ஒரு நாள் நீ பெரிய பெண்ணாக வளரலாம்! ஆனால் எப்பொழுதும் என் குழந்தையாக இருப்பாய் உன் அரவணைப்பு, உன் முத்தங்கள், உன் புன்னகை, உன் கருணை, என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தம் சேர்க்கிறது நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இதனை அடுத்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் சினேகா சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.

prasanna
prasanna