சினேகாவை ஒதுக்கிய பிரபலம் முன்னணி நடிகர்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா…

0
sneha
sneha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சினேகா இவரை புன்னகை அரசி என்றும் அழைப்பு வந்தார்கள் இப்படி சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சரிவர எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சினேகா ஒரு சில படங்களில் மட்டும் தலை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சினேகா சினிமாவில் வந்த ஆரம்ப காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று கூறி நடிகை சினேகாவை நிராகரித்து இருக்கிறாராம் இந்த தகவல் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.

அதாவது நடிகை சினேகா 2000 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து என்னவளே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த சிம்ரன், ஜோதிகாவுக்கு இணையாக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை சினேகா தமிழில் அறிமுகமான முதல் படமான என்னவளே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் மாதவன். முதலில் என்னவளே திரைப்படத்தில் நடிகை சிம்ரன் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதால் என்னவளே படத்தில் அவரால் கால் சீட் கொடுக்க முடியவில்லை.

அதன்பிறகு என்னவளே படத்தின் இயக்குனர் நடிகை ஜோதிகாவை அனுகியிருக்கிறார் ஆனால் அவரும் சில திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்ததால் நடிகை சினேகாவை புக் செய்தார். இதை நடிகர் மாதவனிடம் கூறிய போது எனக்கு முன்னணி நடிகை தான் வேண்டும் சினேகா போல் அறிமுகமான நடிகை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

ஆனால் என்னவளே படத்தின் இயக்குனர் சினேகா தான் இந்த படத்திற்கு கரெக்ட்டாக இருப்பார் என்று கூறி இருக்கிறார் அதன் பிறகு நடிகர் மாதவனும் கடைசியாக இதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நடிகை சினேகா சமீப காலங்களாக விவாகரத்து சர்ச்சையில் சிக்கி வந்து கொண்டிருக்கிறார் ஆனால் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு ஒரே அடியாக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.