தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சினேகா இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களை கைப்ற்றி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால் நடிகை சினேகா நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் தனது உடன் திரைப்படத்தில் நடித்து வந்த பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர்களுக்கு ஒரு பையன் ஒரு மகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் திருமணத்திற்கு பிறகு சினேகா எந்தவொரு திரைப்படத்திலும் கமிட்டாகி நடிக்காமல் இருந்தார் ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார் இவர் தனது கணவருடன் சேர்ந்து வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒருசில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது கணவர் பிரசன்னாவும் தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாக கூறப்படுகிறது மேலும் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக பல நடிகைகளும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடிய தீபாவளி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்கள் அதேபோல் தற்பொழுது நடிகை சினேகாவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உடை ஒரே மாதிரி புடவை என கலக்கலாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இதனை பார்த்த பல ரசிகர்களும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
