தனது இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் சினேகா தெரியுமா. இந்தப் பெயரில் இவ்வளவு விஷயம் இருக்கா.

தமிழ்சினிமாவில் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இவர் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்த பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அழகான ஒரு மகன் பிறந்தார் அதன் பிறகு தற்போது சமீபத்தில் இரண்டாவது மகள் பிறந்து இருக்கிறார். அதனால் இந்த தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரசன்னா தங்களுடைய மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளதாக கூறினார்.

அதாவது இந்த பெயருக்கு அர்த்தம் ஆதியும் அந்தமும் அற்றவள் என்பதுதான். சினேகா முதல் முறை கர்ப்பமாக இருக்கும் போது தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என எண்ணி ஆத்யா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தை பிறந்து விட்டது.

ஆனால் தற்பொழுது பெண் குழந்தை பிறந்து விட்டதால், வேறு எந்த பெயரையும் தேர்வு செய்ய மனம் வரவில்லை முதளில் தேர்வு செய்த பெயரையே கொஞ்சம் மாற்றி ஆத்யந்தா என வைத்து விட்டதாக கூறினார்.

Leave a Comment